கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிய விக்ரம் படத்தின் மூலம் பான் இந்திய அளவில் இயக்குநராக மாறி இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ்.இப்படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து அவரது 67 படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
ஏற்கனவே விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார்.இப்படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தது.இதனை அடுத்து இரண்டாம் முறையாக இவர்கள் கூட்டணி அமைப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிக்கானை லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகான் உடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும், வரவிருக்கும் படத்தில் மன்சூருக்கு சிறப்பான வேடத்தை எழுதியுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் படத்திற்கான ஸ்கிரிப்ட் குறித்து மன்சூர் அலிகானை அணுகவோ அல்லது விவரிக்கவும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சூப்பர் ஸ்டாருடனான திட்டத்தையும் லோகேஷ் தன் கைவசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!