குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டாப் நடிகையாக தற்போது வரை வலம் வருபவர் மீனா. இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் நல்ல படங்களில் நடித்திருக்கின்றார். அந்த வகையில் இவர் இறுதியாக ரஜினி காந்த் நடிப்பில் வெளியாகியிருந்த அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் இவர் கடந்த 2009ம் ஆண்டு ஆண்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும் நைனிகா தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு, கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி இறப்புக்குள்ளானார். இவரது இறப்பிற்கு திரையுலகைச் செர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானும் நேரில் சென்று தனது இரங்களைத் தெரிவித்ததோடு எமது உணவுப் பழக்க வழக்கம் தான் இப்படியான உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- மீனாவின் கணவன் உயிரிழப்பிற்கு காரணம் இதுதான் சும்மா பீதியை கிளப்பாதீர்கள்- குஷ்பூவின் அதிரடிப் பதிவு
- “RIP my friend Sagar’-மீனாவின் கணவரின் இறப்பிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த நடிகர் ஜெயம் ரவி
- உங்கள் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கின்றேன்-ரோஜா சீரியலில் இருந்து விலகவில்லை- முடிவை மாற்றிய சிபு சூர்யன்
- மீனாவின் கணவனின் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் காரணங்கள்… கதறிய மகள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!