தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய காமெடி நடிகர் தான் முத்துக்காளை.இவர் 1997ம்ஆண்டு பொன்மனம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து சினிமாவில் சின்னச்சின்ன கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் நட்பு ஏற்பட அவருடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்தார். அவருடன் இணைந்து செத்து செத்து விளையாடலாம் காமெடி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து வடிவேலுவுடன் சேர்ந்து எம் குமரன் சன் ஆப் மஹாலட்சுமி, சீனா தானா 001, விந்தை, கபாலி தோட்டம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
மேலும் சமீபகாலமாக படவாய்ப்பு இல்லாததால் நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார். இந்தநிலையில் நேற்று உடல் நலக்குறைவால் போண்டா மணி உயிரிழந்த நிலையில், முத்துக்காளை இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.
இந்நிலையில்,58 வயதான முத்துக்காளை அண்மையில் வெளிவந்த B.Lit தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2017ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு பாடத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு 2019ம் ஆண்டு எம்.ஏ. தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தற்போது, B.Lit தமிழில் தேர்வெழுதி அதிலும் பர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெற்றுள்ளார்.சிறு வயதில் இருந்தே பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட முத்துக்காளை தனது கனவை 58 வயதில் நிறைவேற்றி இருக்கிறார். வயது என்பது Just நம்பர் மட்டும் தான்.... சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை முத்துக்காளை நிரூபித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!