இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து பிரபலய்மானவர் தான் ஷோபிதா. இப்படத்தில் இவர் வானதி என்ற காரெக்டரில் நடித்திருந்தார்.
இப்படத்திற்குப் பிறகு இவரகு்கு படவாய்ப்புக்கள் அதிகமாக குவிய ஆரம்பித்து விட்டன. இது தவிர பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். அதாவது சமந்தாவின் முன்னாள் கணவரும் ல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவுடன் ஷோபிதா அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், நடிகை ஷோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அது அவரது திருமண புகைப்படங்கள் இல்லையாம். அது விளம்பரத்திற்காக அவர் பதிவிட்ட பதிவாம்.
இந்த புகைப்படங்களைப் பார்த்ததும் ஷோபிதாவிற்கு நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டது என்று எண்ணியதாக அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ நாக சைதன்யாவை எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என கேட்டு அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
Listen News!