• Sep 20 2024

நடிகர் நகுல் - ஸ்ருதி ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு-இதோ புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இப்படத்தைத் தொடர்ந்து கதாநாயகனாக “காதலில் விழுந்தேன்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”,“மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தவர்.

இவர் பிரபல நடிகையான தேவயாணியின் தம்பி என்பதும் தெரிந்ததே. இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இவ்வாறு இருக்கையில் தனது மனைவி இரண்டாவது தடவையாக பிரவசமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது நேற்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என வெளியிட்டுள்ளார்.

இதற்கு இவரின் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படங்கள்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement