விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்தது.
இவர் ராமருடன் பெண் வேடமிட்டு காமெடியில் அடிக்கும் லூட்டி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இவரும் ராமரும் சேர்ந்து செய்த ’சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை’ காமெடி எபிசோடு பட்டி தொட்டி எங்கும் பரவி சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது.
அடுத்தடுத்த தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து வருகிறார். இதையடுத்து, இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில படங்களில் நடித்திருக்கிறார். அடிக்கடி பல்வேறு சர்சைகளில் சிக்கி மாட்டிக்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நாஞ்சில் விஜயன் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். தற்பொழுது அந்த கார் வாங்கிய ஓர் ஆண்டினை நிறைவு செய்திருக்கின்றார். இது குறித்த வீடியோ ஒன்றினை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!