• Sep 20 2024

விவசாயம் செய்யும் நடிகர் நெப்போலியன்- வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நெப்போலியன்.

திருச்சியில் இருந்து வந்த இவர் 27 வயதில் உதயம் படத்தால் நடிக்க ஆசை வர பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படம் மூலம் நாயகனாக அறிமுகமாகி தனது நடிப்பு திறமையை வெளிக்கொணர்ந்தார்.

தமிழில் இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தமிழை தாண்டி ஹாலிவுட் வரை படங்கள் நடித்திருக்கிறார். எனினும் அதேசமயம் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.

அத்தோடு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரு மகன்கள் உள்ளார்கள். இவர் தனது குடும்பத்துடள் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் இவர் அமெரிக்காவில் உள்ள சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறாராம்.

மேலும் தனது சொந்த நிலத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட அதில் எம்ஜிஆரின் விவசாயி பாடலை பாடி தான் ஒரு அமெரிக்க விவசாயி என்று கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement