தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.மேலும் விஜய் டிவியில் பல சீரியல்கள் டிஆர்பியில் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதால் பல சீரியல்கள் முடிவுக்கு வருவதோடு பல புதிய சீரியல்கள் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் கிழக்கு வாசல் என்னும் சீரியல் ஆரம்பமாகியது இதனை அடுத்து புதிய சீரியல் ஒன்று ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது தெலுங்கில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் Nuvvu Nenu Prema என்ற சீரியலை ரீமேக் செய்துள்ளனர்.
அந்த சீரியலுக்கு "நீ நான் காதல்" என பெயரிட்டு இருக்கின்றனர். இந்த சீரியலில் பாண்டியன்ஸ்டோர்ஸ் சீரியலில் நடித் சாய் காயத்திரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக கூறப்பட்டது. இவரை அடுத்து நடிகர் நவீன் நெக்கட்டிவ் ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நவீன் இதற்கு முதல் விஜய் டிவியில் பாவம் கணேசன் என்ற தொடரில் ஹீரோவாக நடித்தவர்.அந்த சீரியல் முடிவடைந்த பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். இதனால் இவர் மீண்டும் சீரியலில் நடிப்பதால் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!