நடிகர், இயக்குநர் பார்த்திபன் எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர், சினிமாவில் புதுமையான முயற்சியில் ஈடுபடுபவர். அதே வேளை வெளிப்படையாக பேசுகிறேன் என பேசி அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கிக்கொள்வார்.
இந்த நிலையில் சமீபத்தில் Youtube சனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விடயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார்.
அதில் முக்கியமாக காந்தார, டாடா போன்ற படங்கள் “ஓடுது ஓடுது... என்றார்கள் ... எனக்கு செம பொறாமையாக இருந்தது... அப்படி என்ன இருக்கின்றது என்று போய் பார்த்தேன் ஆனால் அவர்களின் திரைக்கதையில் என்னை அடக்கி விடுவார்கள்...அதை பார்த்த பின்பும் படம் நல்லா உள்ளது என்று நானும் திரும்ப வந்து விவேன்.உண்மையில் ஒரு கலைஞனாக வேறொருவரின் படம் ஓடுவது என்று சொன்னால் பொறாமையாகத் தான் இருக்கும் ஆனால் சினிமாவில் பொறாமையை உள்ளே வைத்து விட்டு வெளியில் பாராட்ட வேண்டும்..எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்வது என்று தான் நான் சொல்வேன்..
இதனால் நான் உண்மையை கூறி விடுவேன் அதனால் சில சர்ச்சைகளும் வந்து சேரும்.சில வேளை நான் சொல்வதையும் தவறாக புரிந்து கொள்வார்கள்.
இப்படித்தான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற திரைப்படத்தில் தம்பி ராமையா குறும்படம் எடுக்கும் இளைஞர்களை பார்த்து சொல்வது போல் ஒரு டயலொக் வரும் "குறும்படம் எடுக்கிற குரங்கு பசங்களா" என்று அந்த டயலொக் கார்த்திக் சுப்புராஜ் என்பவரைத்தான் சொல்கிறேன் என கேட்டு ஒரு இரவு புள்ளா நடிகர் பாபிசிம்கா எனது உயிரை எடுத்து விட்டார் என்றார்.ஆனால் நான் உண்மையில் அவரைப் பற்றி சொல்லவில்லை அது கதையில் வரும் காட்சி.
என்னங்க சொல்ல இப்படியே உண்மையை சொல்லி பழகிட்டேன் என மேலும் கூறியிருந்தார்.
Listen News!