• Sep 20 2024

கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ரிலீசுக்கு தயாராகும் 'சலார்'...... மீண்டும் களமிறங்கும் நடிகர் பிரபாஸ் ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடித்த 'பாகுபலி' திரைப்படமானது பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இவரின் புகழை உலகம் முழுவதும் பரப்பியது. இவர் இப்போது நடித்துள்ள 'சலார்' திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் சினிமா உலகில் பிரபாஸின் மார்க்கெட்டும் அசுர வளர்ச்சி கண்டது. அவர் நடிக்கும் படங்கள் அனைத்தையும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் பான் இந்தியா படமாகவும் வெளியிட்டனர். அதை அடுத்து அவர் நடித்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.  


இதையடுத்து பிரபாஸ் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணக் கதையை மையமாக வைத்து தயாராகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சையிப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படமானது அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது.


இந்நிலையில்  அடுத்தாக பிரபாஸ்  ரசிகர்கள் அனைவரலாலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் 'சலார்'. இப்படத்தினை கே.ஜி.எப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி வருவதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புக் கிளம்பியிருக்கின்றது. பல பிரச்சினைகளுக்கு பிறகு இந்த திரைப்படம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 22 -ஆம் திகதி திரைக்குவரவிருக்கிறது.


Advertisement

Advertisement