நடன புயல் பிரபுதேவாவின் அடுத்த படத்திற்கு முசாசி என்று தலைப்பு வைக்கப்பட்டதோடு 2023 ஆண்டு திரைக்கு வரும் என் திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இன்னும் ஒரு போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது
முசாசியில் பிரபு தேவா ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் சாம் ரோட்ரிக்ஸ் இயக்குனராக அறிமுகமாகிறது. மாஸ்டர் மகேந்திரன், ஜான் விஜய் மற்றும் வி.டி.வி கணேஷ் ஆகியோர் நடிகர்களில் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. முசாசி படத்திற்கு லியாண்டர் லீ மார்டி இசையமைக்க , விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
'முசாசி' என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் தோற்றம், கம்பீரமாக இருப்பதால் இணையவாசிகளின் ஆதரவும், வரவேற்பும் எதிர்பார்ப்பை விட கூடுதலாக கிடைத்து வருகிறது. கூடிய விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
Listen News!