தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் பிரபு தேவா. இந்தியாவின் மைக்கில் ஜாக்சன் என்று அழைக்கப்படும் அளவுக்கு அதிவேக நடனத்துக்கு பெயர் போனவர் பிரபு தேவா. பல படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ள இவர் தேசிய விருதையும் வென்றிருக்கிறார்.
இதனையடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்த பிரபு தேவா போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆத்விக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள பஹீரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரபு தேவா. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில், இயக்குநர் சக்தி சிதம்பரத்துடன் மீண்டும் இணைந்திருக்கிறார் பிரபு தேவா. ஏற்கனவே சார்லி சாப்ளின் மற்றும் அதன் இரண்டாம் பாகம் ஆகியவற்றில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்த நிலையில் மீண்டும் தற்போது இருவரும் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மடோனா செபாஸ்தியன் கதாநாயகியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும். நடிகை அபிராமி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பெயர் வெளியிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுஆரம்பித்து நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Listen News!