தமிழ் சின்னத்திரையில் நடித்து வரும் சீரியல் நடிகர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் தான் பிரஜன். இவர் 15 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் இருந்து வருகின்றார்.
அத்தோடு சீரியல் நடிகை சான்ராவைத் திருமணம் செய்திருக்கும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததது என்பது என்பதும் முக்கியமாகும்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலில் கதாநாயகியாக பாவனி நடித்திருந்தார்.இந்த சீரியல் வேற லெவல் ரீச் கொடுத்தது. இதன் பின்னர் அன்புடன் குஷி என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.இந்த சீரியலும் அண்மையில் முடிவடைந்தது.
இவ்வாறு சீரியலில் பிஸியாக நடித்து வந்த இவர் திரைப்பட வாய்ப்புக்கள் கிடைத்தமையால் சீரியலில் நடிப்பதைத் தவிர்த்தார். இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ஜில் என்று ஒரு காதல் சீரியலில் ஹெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!