தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் கில்லி திரைப்படத்தில் பயங்கர வில்லனாக நடித்து அசத்தியிருப்பதோடு அப்படத்தின் மூலம் தான் சிறந்த நடிகராகவும் அறிமுகமானார்.
இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் போன்ற துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் தனுஷ் நாயகனாக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்தடுத்து பொன்னியின் செல்வன், வாரிசு மலையாளத்தில் Varaal, Kunjamminees Hospital,தெலுங்கில் ஷாகுந்தலம் என நிறைய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
இவ்வாறுஇருக்கையில் 1994ம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை திருமணம் செய்த பிரகாஷ் ராஜிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார்.
2004ம் ஆண்டு பிரகாஷ் ராஜின் மகன் இறந்தார், 2009ம் ஆண்டு தனது மனைவியையும் விவாகரத்து செய்தார் நடிகர் பிரகாஷ்ரபஜ்.
இந்நிலையில்நடிகை லலிதா குமாரி 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து வீடு மனைவி மக்கள், புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை, உலகம் பிறந்தது எனக்காக போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.
மேலும் இவர் இதுவரை 35 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். நடிகை லலிதாகுமாரி அவர்கள் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையும் ஆவார்.
இதன் பின் 2010ம் ஆண்டு பொன்னி வெர்மா என்பவரை திருமணம் செய்த பிரகாஷ் ராஜிற்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார்.
Listen News!