தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ'திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இப்படம் 3D VFX டெக்னாலஜியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகின்றது.இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். நடிகர் அஜித்திற்கு எப்படி மங்காத்தா படத்தை கொடுத்தாரோ அதேபோல விஜய்க்கும் ஹிட் கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடிகர் பிரசாந்தும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அத்தோடு பிரபுதேவாவும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
Listen News!