லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.இப்படத்தில் மைக் மோகன், பிரபுதேவா, சினேகா என நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை அண்மையில் தான் பிரமாண்டமாக நடைபெற்றது.
செம கலகலப்பான அதே சமயம் வித்தியாசமான பிரம்மாண்ட கதையம்சத்துடன் இந்த முறை வெங்கட் பிரபு மெகா விருந்தே கொடுக்க ரெடியாகி உள்ளார். இந்தப் படத்தில் நடிக்க நடிகர் பிரசாந்தும் கமிட்டாகியுள்ளார்.
தளபதி 68ல் விஜய்யுடன் எடுத்த எடுப்பிலேயே பாடல் காட்சியில் நடனம் ஆடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த பாடல் காட்சியில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அஜ்மலுக்கு சும்மா வந்து போகும் சீன் தானாம். ஆனால், பிரசாந்த் தளபதி விஜய்யுடன் போட்டிப் போட்டு ஆட வேண்டிய நிலையில், ரொம்பவே திணறிய நிலையில், பிரபுதேவா அவருக்கு ஏற்றவாறு சூப்பரான ஸ்டெப்ஸ்களை மாற்றியமைத்து கொடுத்துள்ளதாகவும், தாறுமாறான ஸ்பீட் ஸ்டெப்களை விஜய் மற்றும் பிரபுதேவா இணைந்து ஆடியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மைக் மோகன் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரசாந்த்தும் ஒருவேளை சீக்ரெட் வில்லனாக இருப்பாரா? அதுதான் ட்விஸ்ட்டா? என்றும் இப்பவே ரசிகர்கள் கெஸ் பண்ண ஆரம்பித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்த் அதுவும் தளபதி விஜய் படத்தில் நடித்தால் வேற லெவல் என்ட்ரியாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!