• Nov 17 2024

மகன் பற்றி மகிழ்ச்சி தெரிவித்த நடிகர் பிரித்வி ராஜ்-இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பிரித்விராஜ் 47 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் நடித்து வருகிறார்.மேலும் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களிலும் ஏராளமான சீரியல்களிலும் பிரித்விராஜ் நடித்துள்ளார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கண்ணான கண்ணே சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்து வருகிறார் பிரித்வி.

நடிகர் பிரித்வி ராஜ், கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வில்லனாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் ஏராளமான சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளார்.



எனினும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கண்ணான கண்ணே சீரியலில் நாயகி மீராவின் தந்தையாக தன்னுடைய மனைவியின் சாவிற்கு காரணமான தன்னுடைய குழந்தையை வெறுக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார். கௌதம் என்ற இந்தக் கேரக்டரில் பெரிய பணக்காரனாக இருந்த பிரித்வி, தற்போது சூழ்நிலை காரணமாக ஏழையாக மாறியுள்ளார்.

சீரியலில் தன்னுடைய மகளை வெறுக்கும் கேரக்டரில் நடித்தாலும் உண்மையில் தன்னுடைய மகனை மிகவும் நேசித்து வருகிறார்  நடிகர் பிரித்வி. இதற்கும் மேல் இவருடைய மகன் சிறப்பு குழந்தையாக உள்ளார். ஒரு சிறப்பு குழந்தையின் பெற்றோராக இருப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் சமூகத்தின் முன்பு பல ஏளனங்கள், கண்டனங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.



கடந்த 2007ம் ஆண்டில் பெங்களூரு விமானநிலையத்தில் தன்னுடைய மகனை செக் செய்த ஊழியர் அவர் என்ன பைத்தியமா என்று கேட்டது தங்களின் இதயத்தை ஈட்டி போல தாக்கியதாகவும் தொடர்ந்து சட்டம் பேசியதாகவும் தெரிவித்த பிரித்வி, தான் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர் உடன் வந்தால் அவர்கள் விமான பயணத்தில் அனுமதிக்கப்படலாம் என்று வாதாடியது ஊடக கவனம் பெற்று, சிஎன்என்-இன் இந்தியன் ஆப் தி இயர் விருதை பெற்றுத் தந்ததாகவும் நினைவு கூர்ந்துள்ளார்.



எனினும் தற்காலங்களில் நிலைமை மிகவும் மாறியுள்ளதாகவும், தாங்கள் தங்களுடைய மகனை விமானநிலையங்களுக்கு அழைத்து செல்லும்போது, பழைய கசப்பான அனுபவங்களை தற்போது பெறுவதில்லை என்றும், யாரும் அவனைப் பார்த்து முகம் சுளிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதனைப் போல கடந்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement