ப்ரித்விராஜ் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழித் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
அதை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
மேலும் இவர் ஆகஸ்ட் சினிமா என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்துகின்றார். இந்த திரைப்பட நிறுவனத்தின் மூலம் உருமி, இந்திய ரூபாய், கடல் கடன்னு ஒரு மாதுகுட்டி, டபுள் பேரல் போன்ற திரைப்படங்களை தயாரித்து பல விருதுகளையும் வென்றார்.
இவர் ஏப்ரல் 25 2011ம் ஆண்டு பிபிசி இந்தியா தொலைக்காட்சி செய்தியாளர் சுப்ரியா மேனனைத் திருமணம் செய்து கொண்டார். இருந்தும் இவர்களது திருமண புகைப்படங்களோ வீடியோக்களோ இணையத்தில் வெளியாகவில்லை.
தற்போது யாரும் பார்த்திராத ப்ரித்வியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!