கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் தான் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினகாந்த் நடித்து வரும் திரைப்படம் தான் ஜெயிலர்.இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் துவங்கியது.
இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இப்படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குநராக பணிபுரிகிறார்.
மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார் என மிரட்டலான லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுனில், தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்', கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்'ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் மங்களம் சீனு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சுனில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
Listen News!