• Sep 20 2024

சூப்பர் ஸ்டார் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்தத்திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருந்ததோடு ரஜினியுடன் பிரபு ,ஜோதிகா, நயன்தாரா எனப் பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர்.

பேய்ப்படமாக வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று 100 நாட்கள் ஓடியதும் முக்கியமாகும். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சந்திரமுகி பாகம் 2 இல் முக்கிய வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும் வடிவேலு மற்றும் இன்னும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதாகவும் கூறப்படுகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் இப்படத்தின் படப்பிடிப்பானது பூஜையுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement