• Sep 20 2024

முதல்வரைச் சந்தித்து அவர் காலில் விழுந்த நடிகர் ரஜினிகாந்த்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஓய்வு கிடைக்கும் போது இமயமலை செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அவர் இமயமலை செல்வது வழக்கம் . கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக அவர் கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை.

அதே போல் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம்  400 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிந்து இருக்கிறது.


இந்த நிலையில் ரஜினி தற்பொழுது இமயமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். பல அரசியல்வாதிகளையும் சந்தித்து வருகிறார்.தற்போது உத்தர பிரதேசத்தில் ரஜினி இருக்கும் நிலையில் அந்த மாநில துணை முதல்வர் உடன் ஜெயிலர் படத்தை அவர் பார்த்து இருக்கிறார்.

மேலும் தற்போது UP முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ரஜினி சந்தித்து இருக்கிறார். அவரை பார்த்ததும் ரஜினி அவர் காலில் விழுந்துவிட்டார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement