நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக ஜெயிலர் என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்திரைப்படம் 600 கோடி வசூலை அள்ளித் தந்தது. இதனை அடுத்து லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 171 திரைப்படத்தின் கதை குறித்த தகவல்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகின்றன.
தற்போது தலைவர் 171 படத்தின் கதை போலீஸ் அதிகாரி கதை இல்லை என்றும் கல்வியில் நடக்கும் ஊழல்களை களையக் கூடிய அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்திலும் கல்வியில் நடக்கும் மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்த நிலையில், அப்படி ஒரு படமாக ஞானவேல் ரஜினிகாந்துக்கு 171 வது படத்தை கொடுக்கப் போகிறாரா என்கிற கேள்வி தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளன.
எப்படி இருந்தாலும் ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தரமான சம்பவத்தை செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இது தவிர மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கேமியோவாக நடித்துள்ள லால் சலாம் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!