பல வருடங்களாக காதலித்து வந்த ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், பிரம்மாஸ்திரா படத்திற்கு பிறகு தங்களுக்குள்ளான காதலை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
அக்குழந்தைக்கு ரன்பீரின் அம்மாவும் பழம்பெரும் நடிகையுமான நீது கபூர் தேர்வு செய்த ரஹா என்ற பெயரை சூட்டியுள்ளனர்.பொதுவாக நடிகர்கள் என்றாலே சொந்தமாக பெரிய வீடு கட்டி அதில் சொகுசான வசதிகளுடன் இருப்பது வழக்கம்தான்.
அந்த வகையில் நடிகர் ரன்பீர் கபூர் பூனேவில் ஒரு வாடகை வீட்டில் மனைவி ஆலியா பட் உடன் குடியேறி இருக்கிறார்.அவர்கள் ஏற்கனவே மும்பையில் ஒரு பிரம்மாண்ட அடுக்குமாடி வீட்டை கட்டி வருகிறார்கள் .
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்புக்கு சொந்தமான 'Trump Tower' அபார்ட்மெண்ட் பூனேவில் இருக்கிறது. அதில் தான் ரன்பீர் கபூர் வாடகைக்கு சென்று இருக்கிறார்.மாத வாடகை மட்டும் 4 லட்சம் ருபாய் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த வருடம் வாடகையை 4.2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் ஒப்பந்தம் போட்டிருக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இருவரும் படப்பிடிப்பு தவிர்ந்த ஏனைய நேரங்களில் தமது மகளுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!