பாக்கிலக்ஷ்மி சீரியலில் பழனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ரஞ்சித் ஹாப்பி சண்டே, ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடராக ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு கலைஞானாக, இந்த மண்ணில் பிறந்த நானும் ஒரு மகன் என்ற ரீதியில் தொலைக்காட்ச்சிக்கு இதை சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. அதாவது சமீபகாலமாக நிறைய மனக்கசப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. அதாவது இப்ப ஒரு கலாச்சாரம் வந்துள்ளது தெருவுக்கு தெரு ஹாப்பி சண்டே என்று ஒன்று கொண்டாடுகிறார்கள். பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆண்களுடன் ஆடுகிறார்கள்.
ரொம்பவும் வேதனையாக இருக்குறது. யார் யார் என்று தெரியாதவர்களுடன் பெண்கள் , ஆண்கள் சினிமா பாடலுக்கு தெருவில் ஆடுவது. எனக்கு மட்டும் அரச அதிகாரம் இருந்தால் அவர்களை பிடித்து ஜெயிலில் போடுவேன். நான் தவறாக சொல்லவில்லை நடன பயிட்சி உள்ளது அங்கே செல்லுங்கள் உடட்பயிச்சி நிலையம் உள்ளது அங்கே செல்லுங்கள் நான் அதை தவறாக சொல்லவில்லை தங்களது இஸ்ரெஸ்ட் குறைப்பதற்காக யார் மகனோ யார் மகளோடு ஆடுகிறார்கள் அதை தொலைக்காட்ச்சிகளும் , பத்திரிகையாளர்களும் விமர்சனம் செய்து வருகிறார்கள் மேலும் நிறைய பாராட்டுகள் வேறுகிடைக்கிறது.
இந்தமாதிரியான கலாச்சாரம் தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக அமைய போகிறது. அழிவை நோக்கி உங்களுக்கு தெரியாமலே அழைத்துச்செல்கிறது. ஒரு போனில் கால் முதல் கொண்டு தற்போது ஆபாச படங்கள் பார்ப்பது வரை காலம் வளர்ந்து விட்டது அதனால் குழந்தைகள் கெட்டுப்போகிறார்கள்.
இந்தமாதிரியான ஹாப்பி ஸ்ட்ரீட் ,ஹாப்பி சண்டே நிகழ்ச்சிகளை ப்ரொமோட் செய்யும் ஊடகங்கள் தமிழ் வழிவந்த நிகழ்ச்சிகளை ப்ரொமோட் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் என் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
Listen News!