• Sep 20 2024

நடிகர் சமுத்திரக்கனி வாங்கும் சம்பளம் இவ்வளவு தானா..? கசிந்த தகவல் இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் சமுத்திரக்கனி.இவர் நாடோடிகள் படத்தின் மூலம் இயக்குநராக பிரபலமானவர் சமுத்திரக்கனி.

இதன்பின், போராளி, நிமிர்ந்து நில், அப்பா போன்ற பல படங்களை இயக்கி பட்டையை கிளப்பி உள்ளார்.

இயக்குநராக மட்டுமின்றி தனது சிறந்த நடிப்பினாலும், மக்களை கவர்ந்துள்ளார். மேலும் சுப்பிரமணியபுரம், சாட்டை, வேலையில்லா பட்டதாரி, விசாரணை, காலா எனும் படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

எனினும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் கூட, சமுத்திரக்கனி நடித்திருந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த டான் படத்தில் நடிப்பதற்காக நடிகர் சமுத்திரக்கனி சுமார் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.

இதன்முலம் தற்போது, நடிகர் சமுத்திரக்கனி வாங்கி வரும் சம்பளம் இதுதான் என்று தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement