• Sep 20 2024

தனது இரண்டு குழந்தைகளுடன் செல்லங் கொஞ்சும் நடிகர் சஞ்சீவ்- வாஃவ் செம கியூட்டாக இருக்குதே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான  சீரியல் நடிகராக வலம் வருபவர் தான் சஞ்சீவ். ஆரம்ப காலங்களில் குறும் படங்களிலும் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார்.


இந்த சீரியல் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர் இந்த சீரியலிலேயே கதாநாயகியாக ஆல்யா மானசாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் ட்ரெண்டிங் ஜோடியாகவும் வலம் வந்தவர்கள் எனலாம்.


மேலும் இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் ஆர்ஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. தனியாக யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர் அதில் பல சுவாரஸியமான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் இவர் சஞ்சீவ் தனது இரண்டு பிள்ளைகளுடனும் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


அதுவும் பிளாக் அன்ட் வைட் கலரில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் சஞ்சீவ் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement