• Nov 10 2024

மீனவன் ஒருவனின் உண்மைக்கதையை படமாக்கிய நடிகர் சரண்ராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஒருவரே நடிகர் சரண்ராஜ். "நீதிக்குத் தண்டனை" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து "ஜெண்டில்மேன், பாண்டியன், பாட்ஷா, தர்மதுரை, பாண்டியன், வீரா" போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது "குப்பன்" என்ற படத்தின் மூலம் மறுபடியும் இயக்குநராக கால் பதித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகனாக அவரது மகன் தேவ் சரண்ராஜ் நடிப்பதோடு, கதாநாயகனுக்கு தந்தையாக சரண்ராஜ்ஜே நடிக்கின்றார். இவர்களுடன் ஆதி தேவ், சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாசலம் ஆகியோரும் அறிமுகமாகின்றனர்.

இப்படத்தினுடைய கதையானது, குப்பத்து மீனவ இளைஞன் ஒருவனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதையாக அமைந்திருக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்ற வண்ணமே உள்ளன.

இந்நிலையில் படம் பற்றி சரண்ராஜ் கூறும் போது"நான் 35 வருசமாக பாலவாக்கத்தில் இருக்கேன். தினமும் நாயைக் கூட்டிட்டு வாக்கிங் போவதுண்டு. அப்போது பல பேருடன் பழக்கமாகி அங்கு அரட்டை அடிச்சிற்றுத் தான் வீட்டுக்கு வருவேன். அப்படித்தான் எனக்கு குப்பன் என்ற மீனவனின் நட்பு கிடைத்தது. அப்போ தான் தோணிச்சு..அவர் கதையை நாம ஏன் எழுத்தாக கூடாதுன்னு. கதை எழுதி முடிச்சதும் அவரது பெயரையே தலைப்பாக வெச்சுட்டேன். அவரும் இப்படத்தில் சின்ன கேரக்டேரில் நடித்துள்ளார்." என்றார்.

அடடே அப்போ மீனவன் ஒருவனின் சொந்தக் கதையை தான் நம்ம சரண்ராஜ் படமாக்கியுள்ளாரா? என்ற வியப்பில் உள்ளனர் அவரது ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement