• Sep 21 2024

நடிகர் சரத்குமார் திடீரென ஆற்றிய சமூகபணி- இலவசமாகக் கொடுத்திருக்கின்றாரா?- கமல்ஹாசனுக்கு டஃப் கொடுப்பார் போல இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் வில்லனாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கிய இவர் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார்.இவரது நடிப்பில் நாட்டாமை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் படங்களின் வரிசைகளில் இடம்பெற்றுள்ளவை. சிறப்பான ஹீரோவாக இருந்த சரத்குமார், தனது சமீபத்திய பேட்டியில், படம் எடுத்து தான் எப்படி நடுரோட்டிற்கு வந்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். 

எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையை இழந்துவிடாமல், இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் இந்த நம்பிக்கை மட்டும் இல்லையென்றால் தான் எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருந்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன், வாரிசு படங்கள் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றன. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் பொன்னியின் செல்வன் 2 படமும் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடித்துள்ளார் சரத்குமார். இந்த கேரக்டர் இந்த படத்தின் முக்கியமான அம்சமாக, சோழர்களை பழிவாங்க நந்தினிக்கு கிடைத்த ஆயுதமாக அமைந்திருக்கும். இந்தக் கேரக்டரை சரியாக உள்வாங்கி முதல் பாகத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சரத்குமார்.

 பொதுவெளிகளிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சரத்குமார். தன்னுடைய குடும்பத்தினருடனும் சரியானபடி நேரத்தை செலவழித்து வருகிறார். நடிகை ராதிகாவை திருமணம் செய்துக் கொண்ட சரத்குமார், சிறந்த கணவன், சிறந்த அப்பா என அடுத்தடுத்த சிறப்புகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் புதிய முயற்சியாக தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக மற்றவர்களுக்கு கொடுக்கும் முன்முயற்சியை எடுத்துள்ளார்.


அவரிடம் அவரது அப்பா மற்றும் மற்றர்கள் கொடுத்த புத்தகங்கள் என 6,000க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ள நிலையில், அவற்றை தன்னுடைய வீட்டில் வாசலிலேயே வைத்து தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார். இதில் மற்றொரு சிறப்பம்சம், அந்த புத்தகங்களில் தன்னுடைய கையெழுத்தையும் போட்டு, ரசிகர்களுக்கு, குறிப்பாக புத்தக ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். 


கைபேசி உள்ளிட்டவற்றால் புத்தக வாசிப்பு குறைந்துள்ள நிலையில், புத்தக வாசிப்பை முன்னெடுத்து செல்ல இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை காட்டிலும் மற்றவர்களுடன் பகிர்வதுதாக் மகிழ்ச்சி தரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலுமட இவரைப் போல கமல்ஹாசனும் புத்தக வாசிப்பை ரசிகர்களுக்கு ஊக்குவிதது வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement