• Nov 17 2024

நடிகர் செந்தாமரையை வீட்டை விட்டு விரட்டியடித்த காதலி குடும்பம்..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் செந்தாமரை காதலி குடும்பம் வீட்டை விட்டு விரட்டியடித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

1980களில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தாமரை. இவர் அந்தக் காலத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். முதலில் மேடை நாடகரா நடித்த செந்தாமரைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து, இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட300க்கும் மேற்பட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்தோடு மலையூர் மம்பட்டியான், மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு, தனிக்காட்டு ராஜா, குரு சிஷ்யன், எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை காட்டியது.

இவ்வாறுஇருக்கையில்  , ஒரு தனியார் சேனலுக்கு நடிகை கெளசல்யா செந்தாமரை பேட்டி கொடுத்தார். எனினும் அப்போது தன்னுடைய கணவரை குறித்து சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில்,

சிவாஜியின் நாடக நிறுவனத்தில் நடித்து வந்த செந்தாமரை பின்னர்  எம்.ஜி.ஆரின் நாடக கம்பெனிக்கு வந்தார்.அத்தோடு  அங்குதான என் கூட அவர் நடிக்க வந்தார். எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது.அத்தோடு  நாடகம் நடக்கும் சமயங்களிலும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன்.மேலும் அதே போல என் கணவரும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளனர். அத்தோடு ஒரு தடவை நான் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன்.


மேலும்  அதைப் பார்த்த அவர் என்னிடம் அந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தார். அத்தோடு  அவருக்கு ரொம்ப பிடித்து போக, இந்த புத்தகத்தை படித்துவிட்டு தருகிறேன் என்று தெரிவித்தார்.இ

நானும் ஓ.கே. சொல்லிட்டேன். படித்த முடித்த பிறகு அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் அவரை பார்க்க ரவுடி மாதிரி இருந்ததால், அவரது என் வீட்டில் இருந்தவர்கள் அவமதித்து அனுப்பி விட்டனர்.

இதன் பின்னர், என்னை சந்தித்த அவர், ‘உன் வீட்டுல நல்ல மரியாதை கொடுத்தாங்கம்மா!” என்று கோபமாக கூறினார். அவரை நான் சமாதானப்படுத்தினேன். இதன் பிறகுதான் எனக்கும், அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, திருமணத்தில் முடிந்தது என்றார்.   

Advertisement

Advertisement