• Sep 22 2024

பாரம்பரிய வீட்டைப் பாதுகாத்து வரும் நடிகர் செந்தில்-அட இது தான் இவருடைய பூர்வீக வீடா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் பிரபல்யமான காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவர் அந்தக் காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பல பிரபலங்களின் படங்களில் நடித்திருக்கின்றார். அதிலும் இவரும்-கவுண்டமணியும் சேர்ந்து அசத்திய காமெடி காட்சிகளை எப்போது வேண்டுமானாலும் ரசித்து பார்க்கலாம்.

இவர் சமீபகாலமாக படவாய்ப்பில்லாததால் நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார். மீண்டும் எப்போது கவுண்டமணியுடன் சேர்ந்து நடிப்பார் என்று ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

கவுண்டமணி உடல்நிலை காரணமாக சினிமா பக்கம் வருவதில்லை என்றாலும் செந்தில் மட்டும் அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான பிஸ்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார், அதன்பிறகு எந்த படமும் நடிக்கவில்லை. சமீபத்தில் மட்டும் செந்திலின் பேத்தி அவரது காமெடியை அவருக்கு முன்பே டப்ஸ்மேஷ் செய்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

சென்னையில் வசித்து வரும் இவருக்கு சொந்த ஊரிலும் ஒரு வீடு உள்ளது. இவரது வீடு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளஞ்செம்பூர் என்ற இடத்தில் உள்ளதாம். இவரின் அந்த வீட்டுப் புகைப்படமே வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement