• Sep 21 2024

பிரபல நடிகையை 4-வதாகத் திருமணம் செய்து கொண்ட நடிகர்-கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமாக படங்களில் நடித்து வருபவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவர் குணச்சித்திர வேடங்களில் இதுவரைக்கும் நூற்றுக்கு அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் இவர் கன்னட நடிகர் சுசீந்திர பிரசாத் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தற்பொழுது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

இதில் 60 வயதாகும் நடிகர் நரேஷிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றிருந்த நிலையில் தற்பொழுது 4-வதாக பவித்ராவைத் திருமணம் செய்தது தானா எனப் பலர் கேட்டு வருகின்றனர்.

அத்தோடு நரேஷ், பவித்ரா இருவரும் முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதால் தங்கள் புதிய திருமண அறிவிப்பை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement