விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் காண்டீன் ஆடர் கைவிட்டுப் போனதால் பாக்கியா அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கடும் சோகத்தில் இருக்கின்றார்.
இப்படியான நிலையில் முதலில் ஒரு ப்ரோமோ வெளியாகியிருந்தது. அதில் ஜெனிக்கு வயிற்று வலி வந்ததால் எல்லோரும் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகின்றனர். அங்கு செழியனும் போகின்றார்.அப்போது ஜெனிக்கு பெண் குழந்தை பிறந்து விட்டதாக டாக்டர் கூறுகின்றார். இதனால் எல்லோரும் சந்தோஷப்பட மாலினி செழியனுக்கு அடிக்கடி போன் பண்ணிட்டு இருக்கின்றார்.
இதனால் செழியன் போன் கோலை கட் செய்ய மாலினி செழியன் வராவிட்டால் கையை அறுத்து கொள்வேன் என்று சொல்லி வாய்ஸ் மெசேஜ் போடுகின்றார். இதனை அடுத்து இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நிலா பாப்பாவுடன் இனியா விளையாடிக் கொண்டிருக்கின்றார்.
அப்போது இனியா உள்ளே சென்ற போது நிலாபாப்பா காணாமல் போய் விடுகின்றார். அந்த நேரம் நடிகர் சித்தார்த் நிலாவைத் துாக்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு தன்னுடைய சித்தா படத்திற்கான ப்ரமோஷனை செய்து விடப்போகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!