• Nov 14 2024

ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறிய நடிகர் சிம்பு- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உடல் எடையை ஏற்றுவதும், குறைப்பதும் எவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த வகையில் சுமார் 108 கிலோ எடை கூடி காணப்பட்ட சிம்பு, பின்னர் தான் நடித்த மாநாடு, மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்காக சுமார் 30தில் இருந்து 40 கிலோ எடை வரை அசால்டாக குறைத்தார்.


மீண்டும் 'பத்து தல' படத்திற்காக தாறு மாறாக உடல் எடையை ஏற்றி நடித்துள்ளார். மேலும் படம் முடிந்த கையேடு... அசால்டாக பல்வேறு உடல்பயிற்சி மற்றும் டயட் இருந்து கூட்டிய எடையை குறைத்துள்ளார் சிம்பு. இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்து தல ஆடியோ லாஞ்சில் தெரிவித்திருந்தார்.


மேலும் பத்து தல திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சிம்பு இன்றைய தினம் தனது ரசிகர்களைச் சந்தித்துள்ளார்.அத்தோடு ரசிகர்களுக்கு தன் கையாலுயெ ப்ரியாணியும் பரிமாறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement