தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகராக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டான். இந்தத் திரைப்படம் 13ம் திகதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது.
இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை ரிலீஸாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், தன் ஒவ்வொரு படம் ரிலீஸாவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் தன் தந்தையின் பெயரில் நடத்தி வரும் தாஸ் அறக்கட்டளை மூலம் ஏதாவதொரு சமூக சேவை செய்து வருகிறார்.
அதன்படி, இந்த முறை சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸை மாவட்டம் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார். இதற்கான விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!