• Sep 21 2024

இளம் நடிகைகளை ஓரம் கட்டி அழகில் ஜொலிக்கும் நடிகர் ஶ்ரீகாந்தின் மகள்! இவ்வளவு அழகா இருக்காங்களே..

Jo / 1 year ago

Advertisement

Listen News!

2002 ஆம் ஆண்டு, இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான 'ரோஜா கூட்டம்' படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில், அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். 

முதல் படத்திலேயே, தன்னுடைய கியூட் சிரிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீகாந்த், இந்த படத்தை தொடர்ந்து, நடித்த ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்து, இவரின் திரையுலக வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

காதல் ரசம் பொங்கும் கதைகளில் வெற்றிகண்ட ஸ்ரீகாந்துக்கு, ஆக்ஷன் படங்கள் மிகப்பெரிய ட்ரா பேக்காக அமைந்து, இவரின் திரையுலக வாழ்க்கையில் பல தோல்விப்படங்களுக்கும்  வித்திட்டது.

பூ படத்திற்கு பின்னர்,  சரியான வெற்றிப்படங்கள் அமையாமல் திண்டாடி வரும் ஸ்ரீகாந்த், சமீப காலமாக வில்லன் கதாபாத்திரத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்தவகையில் காதலர் தினத்தை முன்னிட்டு, மகள் அஹானா மற்றும் மனைவி வந்தனாவுடன் ஸ்ரீகாந்த் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில், ஸ்ரீகாந்த்  மகள்... மளமளவென வளர்ந்து இளம் ஹீரோயின் போல் உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தற்போது இந்த ஃபேமிலி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement