• Sep 19 2024

சற்றுமுன் நிகழ்ந்த சோகம்.. சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகர்.. திரையுலகினர் இரங்கல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் என்பவர் மலையாள திரை உலகில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பதும் துபாயில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்புக்காகவே வேலையை விட்டுவிட்டு கேரளா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.



பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் ஆகியவற்றை முறைப்படி கற்றிருந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கினாவல்லி’ என்ற  திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சன்னி லியோன் நடித்த ’ரங்கீலா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சுஜித் ராஜேந்திரன் எர்ணாகுளம் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement