இயக்குநர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி முதலாம் பாகம் திரைப்படம் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் ஓடி அபார சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் செப்டெம்பர் 28-ஆம் திகதி வெளியானது. சித்திரை படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் புதிய கோணத்தில் சந்திரமுகி 2 திரைப்பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ்வுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் கங்கனா ராணவத், வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.அந்தவகையில் இப்படம் கடந்த 28-ம் திகதி திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. படம் வெளியான நேரம் தொட்டு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருப்பதோடு பாசிட்டிவ் விமர்சனங்களும் அதிகம் கிடைத்து வருகின்றன.
சந்திரமுகி 1 பாகத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ,சந்திரமுகி 2 பாகம் திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு இவ்விதம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். "மிக பெரிய வெற்றி படமாக்கிய சந்திரமுகி திரைப்படத்தை வேறு ஒரு கோணத்தில் நல்ல பொழுதுபோக்கு படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் பி.வாசு அவர்களுக்கும்,அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் , மற்றும் படக்குழுவினருக்கும் என்னுடை வாழ்த்துக்கள் ' என்று கூறியுள்ளார். This has made my day, a surprise love note ✍🏻 🕴🏻 from my Brother, my Guru, my Thalaivar Superstar @rajinikanth ❤️ What more praise would we need for #Chandramukhi2 - your encouragement means the world to us. 🙏🏻 Thank you Thalaiva! 🤝🏻
Guruve Saranam 🙏🏻🙏🏻🙏🏻#PVasu @KanganaTeam… pic.twitter.com/X1AAOzew0C
Listen News!