• Nov 17 2024

அம்மா ஹொட்டலுக்குள் திடீரென புகுந்த வணிக வரி துறையினர் - வசமாக சிக்கி தவிக்கும் நடிகர் சூரி

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அடையாளம் காணப்பட்டவர் தான் சூரி. இவர் அஜித், ரஜினி ,விஜய் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர கதாநாயகனாக விடுதலை என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். நடிப்பைத் தாண்டி சொந்தமாக ஹொட்டல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.


சூரிக்கு சொந்தமான அம்மன் ஹோட்டல் மதுரையில் உள்ளது.இந்த ஹோட்டலில் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணம் வசூலித்து வருவதாக கூறி மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.அதன்படி, வணிக வரி துறையினர் சூரியின் அம்மன் ஹோட்டலில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  

நடந்த இந்த சோதனையில் உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவு பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.இதனால் 15 நாட்களுக்குள் நடிகர் சூரி நேரில் ஆஜராகி இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி,  வணிக வரி துறைநோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement