• Sep 20 2024

விஜய் பட ஹீரோயினுடன் இணையும் நடிகர் சூர்யா..வெளியானது சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே.

முதல் படமே பெரும் தோல்வியில் முடிந்தநிலையில் அவருக்கு அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

பாலிவுட்டில் மொகஞ்சதரோ படத்தில் நடித்து பிளாப் ஹீரோயினாக பெயர் எடுத்தார். அதன்பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அங்கு நடித்த அனைத்து படங்களும் செம ஹிட் அடித்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.

அங்கும் ஆரம்பத்தில் துக்கடா கேரக்டர் மற்றும் ஒரு பாட்டுக்கு நடனம் என்று தான் இருந்தார்.

ஆனால், அதிர்ஷ்டம் இவருக்கு உச்சத்தில் இருக்க, விஜய் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலுக் இவர் தான் ஹீரோயினாக உள்ளார்.

இந்நிலையில் அடுத்து பூஜா ஹெக்டேவுக்கு சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறதாம். சூர்யா - சிறுத்தை சிவா இணையும் படத்தில் பூஜா தான் ஹீரோயின் என தற்போது தகவல் பரவி வருகிறது.

உறுதியான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement