தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் இயக்குநராக வலம் வருபவர் தான் வெங்கட் பிரபு. இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர்.இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தில் இருந்து சினிமாவில் ஜொலித்துவரும் நிலையில், அதில் வெங்கட் பிரபுவும் ஒருவர்.
தற்போது இந்த குடும்பத்தில் இருந்து இன்னொருவரும் சினிமாவில் நுழைத்து இருக்கிறார். வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி தான் அது.வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் தெலுங்கு படமான 'கஸ்டடி'-க்கு ஸ்ரீ ஷிவானி பாடலாசிரியராக மாறி இருக்கிறார்.
தெலுங்கு ஹீரோ நாக சைதன்யா தான் இதில் ஹீரோவாக நடித்து உள்ளார்.ஸ்ரீஷிவானி எழுதிய பாடல் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் கூட அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
Get ur dancing shoes ready!! It’s time for the first single #HeadUpHigh from #Custody releasing on 10th April @ilaiyaraaja @thisisysr @chay_akkineni @SS_Screens @ramjowrites @lyricistkaruna @AlwaysJani #aVPhunt pic.twitter.com/AXxVtBsEen
Listen News!