• Nov 10 2024

2ஆவது திருமணமா...? என்ன கேட்கிறீங்க..? டிரெய்லர் வெளியீட்டு விழாவில் டென்ஷனான நடிகர் விக்கி கவுஷல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்கி கவுஷல். இவருக்கும் நடிகை கத்ரீனா கைப்பிற்கும் 2021-ம் ஆண்டு திருமணம் இடம்பெற்றது. திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் நடித்து வரும் விக்கி கவுஷல் நடிப்பில் தற்போது 'ஜாரா ஹட்கே ஜாரா பச்கே' என்ற படம் தயாராகி உள்ளது.


இப்படமானது வருகிற ஜூன் 2-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் 'ஜாரா ஹட்கே ஜாரா பச்கே' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விக்கி கவுஷல், சாரா அலி கான் உட்படப் கலந்துகொண்டனர். 


இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில், பத்திரிகையாளர் ஒருவர் விக்கி கவுஷலிடம் திருமண வாழ்க்கை பற்றியும் இரண்டாவது திருமணம் பற்றிய அவரது எண்ணங்கள் பற்றியும் வெளிப்படையாக கேட்டார். அதாவது கத்ரீனா கைப்பை விட சிறந்த நடிகை கிடைத்தால் இரண்டாவது திருமணத்தைத் தேர்ந்தெடுப்பது சரி என நினைக்கிறீர்களா? எனகேட்டார். 


பத்திரிகையாளரின் இந்தக் கேள்வியால் இந்தக் கேள்வியால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்தக் கேள்வியால் சற்று டென்ஷன் ஆன விக்கி, "நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? நான் வீட்டுக்கு போக வேண்டும். ஏன் இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறீர்கள்? இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?. அடுத்த பிறவியிலும் கத்ரீனாவை விட்டுப் போக மாட்டேன். எங்களுடையது உண்மையான காதல்" என்று பதிலளித்தார்.

Advertisement

Advertisement