• Sep 20 2024

திடீரென தனது உயிரை மாய்த்துக் கொண்ட விஜய் ஆண்டனியின் மகள்- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக உருவாகி தனக்கென தனி பாணியில் பயணிப்பவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிக்கும் படங்களில் கோடி கோடியாய் செலவழித்து ப்ரோமோஷன் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. டைட்டிலை மட்டுமே வைத்து ப்ரோமோஷன் செய்து விடலாம், அந்த அளவுக்கு இவரது பட டைட்டில்கள் எதிர்மறை பெயர்களை கொண்டே இருக்கும்.

உதாரணமாக பிச்சைக்காரன், சைத்தான், எமன் என முழுக்க, முழுக்க நெகட்டிவான டைட்டிலை கொண்டு ரசிகர்களை தன் பக்கம் இழுப்பார் விஜய் ஆண்டனி. பொதுவாகவே இவரது படங்களில் நடிக்கும் நடிகைகள் புதுமுக நாயகிகளாகவே பெரும்பாலும் அவருடன் இணைந்து நடிப்பார்கள். ஆனால் அந்த நடிகைகள் பலரும் தொடர்ந்து மார்க்கெட்டை பிடிக்க மாட்டார்கள்


 மேலும் சில நடிகைகள் இவருடன் நடித்தது தான் முதலும், கடைசியுமாக சினிமாவை விட்டே காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது.

இந்த நிலையில் இவரது மகள் மீரா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எனக் கூறப்படும் நிலையில், தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 


மீரா, சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.  சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை வேளையில் தூக்கிட்ட நிலையில் மீரா மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  

Advertisement

Advertisement