நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்மையில் படப்பிடிப்பில் பாலிவூட் நடிகர் சஞ்ய் தத் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்த லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு படக்குழு சார்பில் லோகேஷ் கனகராஜூக்கு பிறந்தநாள் விழா எடுக்கப்பட்டுள்ளது.இதில் லியோ படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதனை அடுத்து நடிகர் விஜய்யும் வாழ்த்து் தெரிவித்த புகைப்படத்தை லோகேஷ் பதிவிட்டு விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.இந்தப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!