நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் விஜய்யுடன் ஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
படத்தின் 60 நாட்கள் ஷூட்டிங் சமீபத்தில் காஷ்மீரில் நடந்து முடிந்தது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு நடந்துவந்த ஷூட்டிங் இப்போது பையனூரில் நடந்துவருகிறது. அங்கு விஜய்க்கும், சஞ்சய் தத்துக்குமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இப்படத்தை அடுத்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.. பின்னர் தெலுங்கு இயக்குனர் கோபி சந்த் தான் தளபதி 68 படத்தை இயக்க உள்ளார் என சமீபத்தில் பேச்சு அடிபட்டது. இருப்பினும் இது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.
இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய் தனது அம்மாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.அந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அத்தோடு ஷுட்டிங் மத்தியிலும் விஜய் தனது அம்மவை சந்திக்கச் சென்றுள்ளாரே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!