• Nov 19 2024

லியோ இசை வெளியீட்டு விழாவால் கடும் பீதியில் இருக்கும் நடிகர் விஜய்- இப்படியெல்லாம் கட்டுப்பாடுகளா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதனால் இந்த முறை விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

காரணம் ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் ரஜினி சொன்ன குட்டிக்கதை விஜய்யைக் குறித்து தான் இருக்கும் என்று ரசிகர்கள் திட்டித் தீர்த்து வந்தனர்.அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் இறங்குவதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். ஆகையால் இதைப் பற்றிய விஷயங்களை லியோ மேடையில் விஜய் பேசுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.


 மேலும் சமீபத்தில் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரியில் பல அசம்பாவித நிகழ்வுகள் அரங்கேறியது.அதாவது ஏற்பாட்டாளர்கள் சரியாக நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு செய்யாத காரணத்தினால் மக்கள் அவதிப்பட்டனர். அது போல் லியோ நிகழ்ச்சியில் நடந்து விடக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடு போடப்பட்டிருக்கிறது. 

அதாவது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவட்டம் வாரியாக 200 டிக்கெட்டுகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது.அதுவும் இன்றிலிருந்து இந்த விநியோகம் தொடங்கப்படுகிறது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே பேனர்கள் வைக்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 


மேலும் ரசிகர்கள் தங்களது சொந்த வாகனத்தில் வந்து பொது மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.ஏனென்றால் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடும். அதேபோல் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர அதிகம் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இவ்வாறு ஏ ஆர் ரகுமான் விழாவில் நடந்த தவறு போல் எதுவும் நடக்கக்கூடாது என்பதனால் தளபதிக்கு நாளுக்கு நாள் பயம் அதிகரிக்க கட்டுப்பாடுகள் பலமாக்கப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது..


Advertisement

Advertisement