தமிழ் சினிமாவில் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட விஜய் சேதுபதி,வில்லனாக நடிப்பதிலும் கெத்து காட்டி வருகிறார். இவர் வில்லனாக நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம், போன்ற படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்தன. இவருடைய ஹீரோ சப்ஜெக்ட் படங்களை பார்க்க இருக்கும் ரசிகர்களை விட, வில்லன் சப்ஜெக்டில் நடிக்கும் படத்தை பார்ப்பதற்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் சமீப காலமாக விஜய் சேதுபதி, வில்லனாகவே அதிகம் மிரட்டி வருவதாகவும் மீண்டும் தான் ஒரு ஹீரோ என்பதை உணர்ந்து, அவர் கதாநாயகனாக நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அவருடைய ரசிகர்கள் அன்பு கட்டளை போட்டு வருகின்றனர். எனவே விஜய் சேதுபதியும், அடுத்தடுத்து சில வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் ஹீரோவாக நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
அந்த வகையில், விஜய் சேதுபதி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால், இந்த படம் டிராப்பானதாகவும்... எனவே அடுத்தடுத்து மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
திரைப்படங்கள் மட்டும் மின்றி வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதே போல் மலையாளம், தெலுங்கு, போன்ற தென்னிந்திய மொழிகளிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்துகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி குறித்த பிரபல இயக்குநரும், பெப்சி தலைவருமான ஆர் கே செல்வமணி கூறியுள்ள தகவல் விஜய் சேதுபதி மீதான மரியாதையை மேலும் உயர்த்தும் விதத்தில் உள்ளது. ஆர் கே செல்வமணி ஒரு முறை விஜய் சேதுபதியை சந்தித்து பேசுகையில், பெப்சி யூனியன் பணிபுரியும் தொழிலாளர்கள் 250 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த பண பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளார். உடனடியாக விஜய் சேதுபதி 250 பேருக்கு, தலா ஒருவருக்கு 50,000 என்கிற வீதம் கொடுத்து உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!