• Sep 20 2024

வெளிநாட்டிலும் கோடிக்கணக்கில் புதிய வீட்டை வாங்கிய நடிகர் விஜய்- இத்தனை கோடி பெறுமதி வாய்ந்ததா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து ஏராளமாள ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர் தான் விஜய்.இவரது நடிப்பில் உருவாகிய பீஸ்ட் திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பில் வெளியாகினாலும் கடும் விமர்சனங்களையே சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.


மேலும் நேற்று கூட ஹைதராபாத்தில் இருந்து திரும்பிய விஜய்யுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் விமானத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஸ் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் தளபதி விஜய் சென்னையில் ரூ. 35 கோடி மதிப்பிலான ஒரு பிளாட் வாங்கியதாக பரபரப்பாக தகவல் பரவின. மேலும் அதனை விஜய் அலுவலகமாக பயன்படுத்தி கொள்ள இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதற்கிடையே தற்போது விஜய் துபாயில் ரூ. 65 கோடிக்கு ஒரு Apartment வாங்கியுள்ளதாக தகவலை தெரிவித்துள்ளனர் மூத்த பத்திரிக்கையாளர்கள். ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement