வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் வாரிசு. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருவதோடு தில் ராஜு தயாரித்து வருகின்றார்.
இப்படத்தின் வெளியிடப்படும் அதே நாளில் நடிகர் அஜித்தின் துணிவு படமும் வெளியாகவுள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர். இதில் எந்தப் படம் வசூலில் அள்ளிக் குவிக்கப் போகின்றது என்பது படம் ரிலீஸ் ஆனால் மாத்திரமே தெரிந்து விடும்.
மேலும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதால் வெளிநாடு ரிலீஸில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறதாம். அமெரிக்காவில் பிரீமியர் காட்சி இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. ரிலீஸ் தேதியில் இருக்கும் குழப்பம் தான் வெளிநாடுகளில் பிரச்சனையாக இருக்கிறது.
மேலும் வாரிசை தெலுங்கில் வாருசுடு என்கிற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். அது வாரிசு ரிலீஸ் ஆகி ஒரு சில தினங்கள் கழித்து தான் வரும் என தெரிகிறது. அதன் ரீரெக்கார்டிங் பணிகள் முடியாதது தான் தாமதத்திற்கு காரணம்.
திட்டமிடுதலில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு மீது அப்செட்டில் இருக்கிறார் விஜய் என தகவல் வந்திருக்கிறது. மேலும் வாரிசு ட்ரெய்லர் கட் சொல்லும் அளவுக்கு இல்லை என்றும் அவர் கோபத்தில் இருக்கிறாராம்.இயக்குநர் வம்சியின் வாரிசு ட்ரெய்லரை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பல விதமாக ட்ரோல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Listen News!