• Sep 20 2024

திடீரென வெளிநாட்டுக்குப் பறந்த நடிகர் விஜய்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லியோ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அத்தோடு இப்படத்தின் ஆடியோ செப்டெம்பர் மாதம் நடக்கவுள்ளது.

 லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துள்ள விஜய் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாட்டில் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு செல்லவுள்ளார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் அவர் விமானநிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த வருகின்றது.


 தொடர்ந்து சில தினங்கள் வெளிநாட்டில் கழிக்கவுள்ள விஜய், இசை வெளியீட்டையொட்டி நாடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் நடிப்பைத் தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். குறிப்பாக பிள்ளைகளின் கல்விக்காக அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.இதனால் விரைவில் அரசியலில் களமிறங்குவார் என்றும் நம்பப்படுகின்றது.


Advertisement

Advertisement