இளைய தளபதி விஜய் என்று எந்த மேடையில் கூறினாலும் காது கிழியும் அளவிற்கு சத்தம் கேட்கும், அந்த அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
தென்னிந்திய சினிமா நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய் சிறுவயதில் இருந்தே நடிக்க தொடங்கியவர். ரஜினியை தொடர்ந்து ரூ. 100 கோடிக்கு சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ள விஜய் இப்போது லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தளபதி ரசிகர்கள் லியோ படத்தை காண்பதற்காக மிகுந்த ஆவலில் உள்ளார்கள்.
இவர் தனது அப்பா எஸ்ஏசி உடன் சண்டை போட்டு சில காலம் பேசாமல் இருந்து வந்தார். இதற்குமுன் பட விழாவில் விஜய் அவரது அப்பாவை கண்டுகொள்ளாமல் சென்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.வாரிசு படத்தில் அப்பா செண்டிமெண்ட் பேசிய விஜய் நிஜ வாழ்க்கையில் அப்பா அம்மாவை ஒதுக்கி வைத்திருப்பதாக அந்த நேரத்தில் அதிகம் விமர்சனங்கள் வந்தது.
எஸ்ஏசி சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் தனது அடுத்த பட வேலைகளில் பிசியாக இருந்த நடிகர் விஜய் நேற்று தான் இந்தியா திரும்பினார்.இந்நிலையில் தற்போது விஜய் நேராக அப்பா எஸ்ஏசியை சென்று சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார்.அப்பா மற்றும் அம்மா இருவருடனும் விஜய் இருக்கும் போட்டோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருவதைக் காணலாம்.
Listen News!